Zusammen sicher in der Schweiz

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புடன் ஒன்றாக வாழ்தல்

நல்வரவு!

சுவிட்சர்லாந்தில் ஒன்றாக வாழ்வதற்கான மிக முக்கியமான விதிகள் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ளன. அரசியலமைப்பு மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக உள்ளது. வேறு எந்த சட்டமும் இந்த அரசியலமைப்பை மீற முடியாது.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. இவை ஒரு நபரின் நம்பிக்கைகளில் (உ+ம் அரசியல், மதம் அல்லது சமூகம்) தங்கியிருக்காது செல்லுபடியாகின்றன.

கூட்டாட்சி அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமைகள் எழுதப்பட்டுள்ளன.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனவெறி மற்றும் பாரபட்சம் காட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருப்பதுடன் தமது வாழ்க்கையை தாமே சுயமாக தீர்மானிக்கின்றனர்.
  • மற்றவர்களை அவமதிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ செய்யாத வரையில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி உண்டு.
  • அனைத்து நபர்களும் தங்கள் மதத்தை பின்பற்றவும், தங்கள் நம்பிக்கையை அமைதியாக கடைப்பிடிக்கவும் சுதந்திரமாக உள்ளனர்.

அன்றாட வாழ்வில் பொலிஸ்

சுவிட்சர்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. ஆயினும் இங்கும் கூட குற்றச் செயல்கள் நடக்கின்றன. மற்ற விஷயங்களில்

  • பொது இடங்களில், உதாரணமாக பூங்காக்கள் மற்றும் உணவுச்சாலைகளில், ரயிலில், பேருந்தில் அல்லது ரயில் நிலையங்களில்,
  • உங்கள் சொந்த சுற்றாடலில், உதாரணமாக வீட்டில், பாடசலையில் அல்லது வேலையில் அல்லது
  • இணையதளத்தில்.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும் பணி பொலிஸாருக்கு உள்ளது. இது சட்டங்களை நடை முறைப்படுத்துவதுடன் குற்றச்செயல்களை விசாரிக்கிறது.

உங்களுக்காகவே பொலிஸ் இருக்கிறது. நீங்கள் ஒரு குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது சாட்சியாகவோ இருந்திருந்தால் புகாரளிக்கவும். நீங்கள் ஆபத்தில் இருந்தால், உடனடியாக அவசர அழைப்பு எண் 117 ஐ அழைக்கவும்.

பொலீஸார் மேற்கொள்ளும் சோதனைகள்

பொலீஸ் பொதுமக்களின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதி செய்கிறது. இந்த நோக்கத்திற்காக தனிமனித சோதனைகளை மேற்கொள்ளலாம். சோதனையின் போது பரஸ்பரம் கௌரவமாக நடந்து கொள்ளல் முக்கியமானது. இதனால் நிலைமை சுமுகமடைகிறது மற்றும் பொலீஸார் சோதனையை சுமுகமாக மேற்கொள்ள முடிகிறது.

நீங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டால், உங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் அல்லது உங்கள் அடையாளத்தை வேறு விதத்தில் சரிபார்க்க அனுமதிக்க வேண்டும்.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • பொலிஸாரின் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள் மற்றும் நட்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு கேள்வி அல்லது அறிவுறுத்தல் புரியவில்லை என்றால், „என்னால் உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை“ என்று கூறுங்கள்.
  • உங்கள் கைகளை எப்போதும் பார்க்கக் கூடியவாறு வைத்துக்கொள்ளுங்கள் மற்றும், பொலீஸாரைத் தொடாதீர்கள்.
  • உங்கள் பெயர் மற்றும் முகவரி பற்றிய தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • அவசியமான மேலதிக விசாரணைகளுக்காக உங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவதற்கான உரிமை பொலீஸாருக்கு உண்டு.
  • சாத்தியமான குற்றச் செயலை விசாரிக்க அல்லது தடுக்க பொலீஸாருக்கு அனுமதி உண்டு உங்கள் உடைகள், உங்கள் பைகள் மற்றும் உங்களிடம் உள்ள பிற பொருட்களைச் சோதிக்க உரிமை உண்டு.

பொலீஸாரும் கூட விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் ஒப்பீட்டளவில் நியாயமாக செயல்பட வேண்டும்.

  • தனி நபரை சோதனை செய்ய பொலீஸாருக்கு ஒரு காரணம் (உறுதியான ஆதாரம்) இருக்க வேண்டும். சாதாரணமாக, சோதனைக்கான காரணத்தை பொலீஸார் அறிவிக்க வேண்டும்.
  • பொலிஸ் சீருடை அடையாளமாக செல்லுபடியாகின்றது. பொலிஸார் சிவில் உடையில் தோன்றினால், பொலிஸ் அடையாள அட்டையைக் காட்டி தங்களை அடையாளம் காட்ட வேண்டும்.

தனிநபர் சோதனை ஒன்றின் பொழுது நீங்கள் பொலீஸாரினால் சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாக உணர்ந்தால், பொலிஸ் அதிகாரியின் பெயரைக் கேட்டு திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பெடுக்கவும். சம்பவம் குறித்து அந்தந்த பொலிஸ் நிலையத்தின் புகார் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவும்.

Help and advice