Zusammen sicher in der Schweiz

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புடன் ஒன்றாக வாழ்தல்

நல்வரவு!

சுவிட்சர்லாந்தில் ஒன்றாக வாழ்வதற்கான மிக முக்கியமான விதிகள் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ளன. அரசியலமைப்பு மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக உள்ளது. வேறு எந்த சட்டமும் இந்த அரசியலமைப்பை மீற முடியாது.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. இவை ஒரு நபரின் நம்பிக்கைகளில் (உ+ம் அரசியல், மதம் அல்லது சமூகம்) தங்கியிருக்காது செல்லுபடியாகின்றன.

கூட்டாட்சி அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமைகள் எழுதப்பட்டுள்ளன.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனவெறி மற்றும் பாரபட்சம் காட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருப்பதுடன் தமது வாழ்க்கையை தாமே சுயமாக தீர்மானிக்கின்றனர்.
  • மற்றவர்களை அவமதிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ செய்யாத வரையில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி உண்டு.
  • அனைத்து நபர்களும் தங்கள் மதத்தை பின்பற்றவும், தங்கள் நம்பிக்கையை அமைதியாக கடைப்பிடிக்கவும் சுதந்திரமாக உள்ளனர்.

தீவிரமயமாக்கல் மற்றும் தீவிரவாதம்

தீவிரமயமாக்கல் என்பது ஒருவர் தீவிரவாதக் கருத்துக்களை தன்னுள் வளர்த்தெடுக்கும் செயல்முறை என்பதுடன் இது அவரை அனேகமாக வன்முறைக்கு ஆளாக்குகின்றது. தீவிரமயமாக்கலுக்கு அரசியல், சமூக, கருத்தியல் அல்லது மதக் காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.

தீவிரமயமாக்கலின் சாத்தியமான அறிகுறிகளாக, எடுத்துக்காட்டாக, ஆளுமையில் மாற்றம், வாழ்க்கைமுறையில் மாற்றம், உலகை ஒருவரின் சொந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பது, தீவிரவாத வன்முறையை மகிமைப்படுத்துதல் மற்றும் / அல்லது பிரச்சினைக்குரிய காணொளிகளை பரப்புதல் ஆகியவை அடங்கும்.

உங்கள் சுற்றாடலில் இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் அவதானிக்கும் பட்சத்தில், ஒரு பராமரிப்பாளர், உள்ளூர் தொடர்பு நிலையம் அல்லது பொலிஸைத் தொடர்பு கொள்ளவும். இதன் மூலமாக முன்கூட்டியே சாத்தியமான எதிர்மறையான விளைவுகளை தடுக்க முயற்சிக்க முடியும்.

Help and advice