Zusammen sicher in der Schweiz

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புடன் ஒன்றாக வாழ்தல்

நல்வரவு!

சுவிட்சர்லாந்தில் ஒன்றாக வாழ்வதற்கான மிக முக்கியமான விதிகள் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ளன. அரசியலமைப்பு மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக உள்ளது. வேறு எந்த சட்டமும் இந்த அரசியலமைப்பை மீற முடியாது.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. இவை ஒரு நபரின் நம்பிக்கைகளில் (உ+ம் அரசியல், மதம் அல்லது சமூகம்) தங்கியிருக்காது செல்லுபடியாகின்றன.

கூட்டாட்சி அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமைகள் எழுதப்பட்டுள்ளன.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனவெறி மற்றும் பாரபட்சம் காட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருப்பதுடன் தமது வாழ்க்கையை தாமே சுயமாக தீர்மானிக்கின்றனர்.
  • மற்றவர்களை அவமதிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ செய்யாத வரையில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி உண்டு.
  • அனைத்து நபர்களும் தங்கள் மதத்தை பின்பற்றவும், தங்கள் நம்பிக்கையை அமைதியாக கடைப்பிடிக்கவும் சுதந்திரமாக உள்ளனர்.

பின்தொடர்ந்து துன்புறுத்துதல்

பின்தொடர்ந்து துன்புறுத்துதல் என்பது ஒரு நபரை ஒருவர் மீண்டும் மீண்டும் தொடர்புகொள்வது அல்லது, மற்றநபர் அவரை விரும்பவில்லை என்று சொன்னாலும் அல்லது வெளிக்காட்டினாலும், கூட துன்புறுத்துவது. பாதிக்கப்பட்ட நபருக்கு இது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பின்தொடர்ந்து துன்பப்படுத்துதல் செயல்களில், மீண்டும், மீண்டும் தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தும் செய்திகள், தினசரி மின்னஞ்சல்கள், வேலை அல்லது வீட்டிற்கு வருகை, வழக்கமான பரிசுகள், பொது உளவு பார்த்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவை அடங்கும். பின்தொடர்ந்து துன்புறுத்தல் – செயல்களில் தனிப்பட்ட செயல்களும் தண்டனைக்குரியதாக இருக்கலாம்.

நீங்கள் பின்தொடர்வதால் பாதிக்கப்பட்டிருந்தால்

  • நீங்கள் எந்த தொடர்பையும் விரும்பவில்லை என்று வெளிப்படையாகவும் மற்றுமொரு தடவை அறிவிக்கவும்.
  • பின்னர், உறுதியாக இருங்கள்: தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றுக்கு பதிலளிக்க வேண்டாம், மற்றும் பரிசுகளை ஏற்க வேண்டாம்.
  • உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தெரிவிக்கவும்: குடும்பத்தினர், நண்பர்கள், பணிபுரியும் சக ஊழியர்கள் மற்றும் அயலவர்கள். இவர்கள் உங்களுக்கு ஆதரவு வழங்கலாம்.
  • திகதி, இடம், நேரம் மற்றும் சாட்சிகளுடன் (பின்தொடர்தல் டைரி) அனைத்து பின்தொடர்தல் செயல்களையும் ஆவணப்படுத்தவும்.
  • ஆலோசனை பெறவும். ஆலோசனை நிலையங்களும் பொலிஸாரும் உங்களுக்காக உள்ளன.

Help and advice