Zusammen sicher in der Schweiz

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புடன் ஒன்றாக வாழ்தல்

நல்வரவு!

சுவிட்சர்லாந்தில் ஒன்றாக வாழ்வதற்கான மிக முக்கியமான விதிகள் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ளன. அரசியலமைப்பு மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக உள்ளது. வேறு எந்த சட்டமும் இந்த அரசியலமைப்பை மீற முடியாது.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. இவை ஒரு நபரின் நம்பிக்கைகளில் (உ+ம் அரசியல், மதம் அல்லது சமூகம்) தங்கியிருக்காது செல்லுபடியாகின்றன.

கூட்டாட்சி அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமைகள் எழுதப்பட்டுள்ளன.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனவெறி மற்றும் பாரபட்சம் காட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருப்பதுடன் தமது வாழ்க்கையை தாமே சுயமாக தீர்மானிக்கின்றனர்.
  • மற்றவர்களை அவமதிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ செய்யாத வரையில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி உண்டு.
  • அனைத்து நபர்களும் தங்கள் மதத்தை பின்பற்றவும், தங்கள் நம்பிக்கையை அமைதியாக கடைப்பிடிக்கவும் சுதந்திரமாக உள்ளனர்.

தெருவில் பாதுகாப்பாக பயணித்தல்

வீதிப்போக்குவரத்தில் நாம் பாதுகாப்பாக இருக்க, வீதியில் ஒழுங்கு விதிகள் உள்ளன. இவை நடக்கும்போதோ, மோட்டார்சைக்கிள், காரில் அல்லது பிற வாகனங்களில் செல்லும் பொழுது கடைப்பிடிக்கப்பட வேண்டும். விபத்துகளைத் தவிர்ப்பதற்கு, வீதியைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மரியாதையுடனும், முன்மாதிரியாகவும் இருப்பதுடன் வாகனம் ஓட்டும் போதும் மற்றும் பிற நபர்களுக்கும், வாகனங்களுக்கும் கரிசனை காட்டுவது முக்கியம்.

நடக்கும்போது

சைக்கிள் மூலம்

பிற முக்கியமான தகவல்கள், சட்டங்கள் மற்றும் சமிக்ஞைகள்

Help and advice